எஸ். சண்முகம் கவிதை

அமர்ந்திருந்த இருக்கை
சாய்ந்திருந்த சுவர் பகுதி
நடந்து கடந்த அறையெங்கும்
பேச்சில் இடம்பெறாத சொற்கள்

முழுமையாய் சாத்த மறந்த கதவின் கைப்பிடியில் பதிந்த ரேகை
கண்ணாடி நீர்க்குவளையில்
அழுத்தமின்றி பருகிய இதழ்கள்
தணியும் முன்னரே தீர்ந்த நீர்

எழும்பி வீழும் சாளரத்து திரையின்
வெளிப்புறத்தை உள்ளிருந்து பார்க்கையில்
தெளிவின்றி புலப்பட்டாலும்

ஒருமுறையாகிலும் நிறைவேற்றத்தை உணரந்துவிட
முன் உழல்கையில்
சாலையின் முடிவில்
எப்பக்கம் திரும்புவதென மறந்தவனாயினும்
இத்தீர்மானமின்மைக்கு இணங்க மாட்டேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன