தஞ்சாவூர் ஹரணி/மூன்று ஹைக்கூ..

நவீன விருட்சம் அழகிய சிங்கர் வழங்கும் இணையக் காலக் கவியரங்கம் 45 நாள் 24.4.24

மூன்று ஹைக்கூ..

எதிலும் தாமதம்
தவறின்
தொடக்கம்.

(2)

நிழலுண்டு
வெயிலில் வீசியெறியப்படும்
எந்தப் பொருளுக்கும்.

(3)

அமைதியாக ஊர்கிறது பாம்பு
பரபரப்பாகிறது
தெரு.