
அழகிய சிங்கரின் என்பா
- மே தினமே வருக வருக
ஏழையின் வாழ்வில் ஏற்றம் பெருக
உழைப்பினால் வாழ்வு உன்னதம் அடைக
பசிப்பிணி
அறவே அகலுக. - மே தினமே வருக வருக அனைவரும் ஒன்றாய் கூடி மகிழ்வோம்
ஏற்றத் தாழ்வு நீங்க முயல்வோம்
பாரினில் அமைதி காப்போம் - மே தினமே வருக வருக
உழைப்பின் பெருமை உலகம் அறிந்திட
மக்கள் வாழ்வில் வசந்தம் வீசிட
உழைப்போம் அனைவரும் கூடி !
01/05/2024
12 pm
