
“அம்மா பாரதியாரும் புதுமைப்பெண்ணும்
என்கிற தலைப்பில் கட்டுரை எழுத எனக்கு
கொஞ்சம் ஹெல்ப் பண்ணமுடியுமா?”
மகன் சுனில் கேட்டதும் தன்னுடைய வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு அவனுக்கு
உதவும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டாள்
அவன் தாய் சுமதி.
கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியில் சுனிலுக்கு முதல்பரிசு
கிடைத்தது.
என்னபிரச்சினை என்றாலும் சுனிலுக்கு
உடனடியாக அவன் தாயின் உதவி கிடைக்கும்
குழப்பம் நீங்கி அமைதியுடன்சுனில் அதற்கு
தீர்வுகாணமுடியும்.
காதலித்து திருமணம் செய்துகொண்ட சில
ஆண்டுகளிலேயே சுனில் சிறுவனாக இருந்த
போது சுமதியை ஒதுக்கிவிட்டு இன்னொரு
பெண்ணுடன்அவள் கணவன் சுதாகர் வாழப்
போய்விட்டதும், டைவர்ஸ் வாங்கிக்கொண்ட
தும் அவளுக்குக்கிடைத்தமிகப்பெரிய
அதிர்ச்சி. தொடர்ந்து பெற்றோரை இழந்து
தனியாளாகி சுனிலை வளர்க்க வேண்டிவந்த
தும்,வாழ்க்கையே போராட்டமாக அமைந்தாலும் அவளுக்குஉறுதுணையாக
இருந்தது அவள் வீட்டுக்கருகிலேயே இருந்த
தனியார் மாணவப்பள்ளியில் அவள் பார்த்த
ஆசிரியை வேலைதான்.
நல்லவேளையாக தன்னை ப்பெற்றோர்கள்
படிக்கவைத்தார்கள் என்று அடிக்கடி நன்றி
யுடன் நினைத்துக்கொள்வாள்.
சுனில் அம்மா கொடுத்த ஆதரவில்பொறியி
யல்படிப்பைமுடித்துதில்லியில் வேலைகிடை
த்து அதில் சேர்ந்தான். அவனைப்படிக்கவைப்
பதற்காக சுமதி வாங்கிய கடனை அடைக்க
அவள் வேலையைவிடமுடியாமல் தொடர
வேண்டிவந்ததால் சென்னையிலேயே இருக்க வேண்டிவந்தது.
சுனில் வேலைபார்த்த அலுவலகத்தில் சாந்தி
யின் அறிமுகமும் நட்பும் கிடைத்து அது
காதலாக மாறியது.
சுனில் அவ்வப்போது தன் அம்மாவைப்பார்க்க
சென்னை வந்தாலும் தன் காதலைப்பற்றி
அவளிடம் பேச மிகவும் தயங்கினான்.
தனது காதல் திருமணம் தோல்வியில்முடிந்து
விட்டதால் அம்மா தன் மகன் விஷயத்தில்
அதை ஏற்றுக்கொள்ளமாட்டாளோ என்கிற
பயம் அவனுக்கிருந்தது
சாந்திக்கும் தந்தை இல்லை அவர் இறந்து
பல வருடங்களாகிவிட்டன.
அவள் தாய் அவர்களது திருமணத்திற்கு
சம்மதித்ததும் சாந்தி சுனிலின் அம்மாவைப்
பார்க்க ஆசைப்பட்டாள்.
அது அவசியமில்லை நம்ம கல்யாணம்நடந்த
பிறகுபோய் பார்க்கலாம்”என்று சுனில் சொன்னது சாந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது
“ஏன் அப்படிச்சொல்லறே”
“காரணம்எல்லாம் கேட்காதே இதைப்பத்தி
அம்மாவுக்கு தெரியாமல் இருக்கிறதுதான்
நல்லது”
“அதுதான் ஏன்னுகேட்கிறேன்”
“ப்ளீஸ். அதைப்பற்றிஎனக்கு பேச இஷ்டம்
இல்லை”
சாந்தி அதிருப்தியுடன்தான் குறிப்பிடப்பட்ட
திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள்.
மறுநாள் திருமணம் என்றால் முதல்நாள்
அம்மா வந்து டாக்ஸியில் சாந்தியுடன் இறங்கியதும் சுனில் திகைத்தான்.
சாந்தி சிரித்துக்கொண்டே”என்ன நம்ம கல்யாண விஷயம் அம்மாவுக்கு எப்படித்
தெரிஞ்சுதுன்னு ஆச்சரியமாக இருக்கா? உன்
அம்மாவின் உழைப்பும் பாசமும்தான் உன்னை இந்த அளவுக்கு உயர்த்தி என்
அறிமுகம் உனக்குக்கிடைக்க காரணமாக
இருந்திருக்கு. அது உனக்கு ஏன் தெரியலே?”
இப்படிப்பட்ட அம்மாவின் அன்பும் ஆசியும்
நமக்கு அவசியம் தேவை . என்ன அம்மாவை
எப்படி கான்டாக்ட் பண்ணினேன்னு தோணுதா?உன் மொபைலிலிருந்து ரகசியமாக நம்பரை பார்த்து குறிச்சுண்டேன்”
புன்னகையுடன் சொன்ன சாந்தியை அன்புடன் அணைத்துக்கொண்டாள் சுமதி.
அனுப்பியவர்.

,, பெண் மனது பெண்ணிற்க்குத்தான் புரியும் என்பது இது தானோ!