மஞ்சுளா சுவாமிநாதன்/நாக்குட்டி

“பார்த்தியா வீரா என் பக்கத்துல எவ்வளவு ஆசையா படுத்திருக்கு, அவனுக்கு என்ன தான் பிடிக்கும்” என்றான் ராமு. “வீரா, என்கிட்ட வாயேன்” என்று அழைத்த சிவா அருகே வாலாட்டியபடி போனது வீரா. “பார்த்தியா நா கூப்பிட்ட உடனே உன்ன விட்டுட்டு வந்துட்டான், அவனுக்கு என்ன தான் பிடிக்கும்” என்று சிவா ஆடினான்.     “டேய் சும்மா இருங்கடா… நாள் பூரா இதே பொழப்பா போச்சு, ஆயாவுக்கு ஒத்தாசையா எதாவது பண்ணலாமுல்ல,” என்றாள் பாட்டி. “இந்தா அஞ்சு ரூவா, வெளியில  தாயி கீரை விக்குறா, போய் வாங்கியா” என்றாள் பாட்டி ராமுவிடம். 

“ஆயா இங்க வாயேன், இந்த வீரா என்ன பண்ணுதுன்னு பாரேன்” என்று திண்ணையில் படுத்திருக்கும் தாயி அருகில் சுருண்டு படுத்திருந்த வீராவைப் பார்த்து அழைத்தான் சிவா. “அது நாக்குட்டி டா எல்லார் மேலேயும் உசுரா இருக்கும், மனுசங்களப்போல இல்ல” என்று கூறி சிரித்தாள் பாட்டி. ,