ரேவதி ராமச்சந்திரன்/சமூக சே வகி சுமதி

நேற்றைய பார்ட்டி முடிந்து வீட்டில் எல்லாம் இறைந்து கிடைக்கின்றன. பாத்திரங்களும் கண்ணாடி டம்ளர்களும் ஒரு பக்கம், ஒரு பக்கம் துணிமணிகள். வேலைக்காரி அஞ்சலியைக் காணவில்லை. அவளைப் பார்த்து வரலாம் என்று அவள் வீட்டுக்குச் சென்ற சுமதி அவள் வீட்டு வாசலில் பஞ்சரான சைக்கிள், துணிமணிகள், குப்பை கூளங்களைப் பார்த்து பாவம் இவர்கள் தம் வீட்டையும் சுத்தம் செய்து கொண்டு நம் வீட்டையும் பார்த்துக் கொள்கிறார்கள். இனி இவர்களுக்கு சுத்தத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி சம்பளத்தின் கூட ஒவ்வொரு மாதமும் வீட்டை சுத்தப்படுத்தும் சர்ப், குப்பை கூடை எல்லாம் வாங்கித் தர வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள் சமூக சே வகி சுமதி