சித்ரா ரமேஷ்/வாசலும் வாழ்க்கையும்/

வாசலும் வாழ்க்கையும்
தொலைவதற்கு ஒன்றுமில்லை
வாழ்க்கையைத் தவிர
தேடுவதற்கும் ஒன்றுமில்லை
வாழ்வின் அவலங்களைத் தவிர
உடைந்த மிதி வண்டி
ஊசிப்போன உணவு
கிழிந்த வேட்டி தோண்டினால்
கிடைக்கும்
தொலைந்தவை
வாசல் கோலம்
அலங்கோலம்
வீட்டுக்குள்
இன்னும் என்ன மீதமிருக்குமோ??