வி.வி. கலைச்செல்வி/அதாகப்பட்டது


எனக்கும் பேனாவிற்கும்
கொஞ்சமும்
பொருத்தமில்லை தான்.

ஸ்டேட் பேங்கில் சலான்
நிரப்பக் கேட்டார்ஒருவர்
அது அவரோடே போயிற்று..

பஸ்ஸில் நம்பர் எழுதிவிட்டு
தருவதாய் கேட்டார் ஒருவர்
அடுத்த நிறுத்தத்தில்
அவருடன் இறக்கிப் போயிற்று…..

ஒன்றிரண்டு கடைத் தெருவில்
சிலது டீக்கடையில்..
இன்னும் சிலது
சில இடங்களில்…..

மூடியை வைத்துக் கொண்டு
பேனாவைத் தாருங்கள்
என்ற மனைவியின்
சொல்படி கேட்டேன்….

இப்போதெல்லாம்
வெற்று மூடிகள்
அங்கங்கே சிதறிக்கிடந்து
சிரிப்பாய் சிரிக்கிறது
என் பேனா கதைகளை.


தாராபுரம்