கோவை எழிலன்
திருமால் அவதாரம் சிறு புலியோ?
கடந்த பாடலான ஒட்டக்கூத்தரின் பாடலுக்கு புகழேந்தியாரின் பதில்
திருமாலின் அவதாரம் புலியன்று மீன் தான். சிவனாரின் தலையில் அமர்வதும் கதிர் அன்று நிலவுதான். திருவிளையாடல் நிகழ்ந்தது உறையூரில் அல்ல மதுரையில் தான். சம்பந்தரின் புனல்வாதின் போது ஏடு கரை ஏறியது வைகையில் தான் காவிரியில் அல்ல. பிணியை ஓட்டுவதற்கு வேம்பு தான் மருந்தாக பயன்படுகிறது சோழனின் மலரான ஆத்தி அன்று. கடல் தன் சீற்றத்தை விட்டு பணிந்ததும் வடிம்பலம்ப நின்ற பாண்டியனையே அன்றி சோழனை அன்று. எனவே பாண்டிய நாடே சோழ நாட்டை விட உயர்ந்தது. பாடல் கீழே
“திருநெடு மாலவதாரஞ் சிறுபுலியோ வம்மானை
சிவன்முடி யிலேறுவதுஞ் செங்கதிரோ வம்மானை
ஒருமுனிவ னேரியிலோ வுரைதெளிந்த தம்மானை
ஒப்பரிய திருவிளையாட் டுறந்தையிலோ வம்மானை
கரையெதிரே டேறியது காவிரியோ வம்மானை
கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ வம்மானை
பரவை படிந்த்துஞ் சோழன் பதந்தனிலோ வம்மானை
பாண்டியனார் பராக்கிரமம் பகரெளிதோ வம்மானை”
