இனிக்கும் தமிழ் – 37

  – டி வி ராதாகிருஷ்ணன்

திருமூலர் திருமந்திரத்தில்

எண்ணலங்காரம் பொருந்திய பாட்டொன்று திருமந்திரத்தின் முதற் பாடலாகத்
திகழ்கின்றது. அப்பாடல் பின்வருமாறு :

“ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே.”

. `ஒருவனே தேவன்’

அடுத்து தன்னிடமிருந்து பிரிப்பின்றி நிற்கும் ஆற்றலை அதாவது அருளை
இரண்டெனக் கொண்டுள்ளார். இரண்டவன் இன்னருள் என்பதில் அவனது
அருள்இருதிறப்படும் என்ற பொருள்பட அறக்கருணை, மறக்கருணையைக்
குறிப்பிட்டுள்ளார்.

நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும்
(காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார்.

நான்கு உணர்ந்தனன் என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்னும்
நான்கனையும் தானே உணர்ந்து உயிர்கட்கு உணர்த்துபவன் என்பதைக்
காட்டுகிறது.

ஐந்து வென்றனன் என்பது  ஐந்து புலன்களையும் வென்றவன்.

ஆறு விரிந்தனன் என்பது, மந்திரம். பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்னும் ஆறு

ஏழு உம்பர்ச் சென்றனன் என்பது பிரமலோகம், விஷ்ணு உலகம், உருத்திரலோகம்,
மகேசுவரலோகம், சதாசிவலோகம், சக்திலோகம், சிவலோகம் என்னும்ஏழுலகங்கட்கும்
மேற்சென்று நின்றவன் என்பதை உணர்த்தும்.

அங்கு அவன் தனித்துச் செயற்படாது இருந்தான் அவனை நெஞ்சமே நீ உணர்ந்து
எட்டு அடைவாயாக என்று பூர்த்தி செய்துள்ளார். தனித்துச்
செயல்படாதிருந்தான்என்பது பரசிவமும், பராசக்தியும் தன்னிலையில்
உலகமுகப்படாது சும்மாயிருக்கும் சொரூப நிலையைக் குறிப்பதாகும்.