அன்னபூரணி தண்டபாணி/குப்பை

“அல்லாத்தையும் தூக்கி கடாசிடணும் போல வருது..”

“ஏய்!”

“இன்னா நெனச்சிக்கின என்னப் பத்தி..”

“அடிங்.. வாய மூடப் போறியா இல்லியா?”

“நா இன்னா அவ்ளோ கேவ்லமா பூட்டேனா..”

“கம்னு கெட.. கஸ்மாலம்..” அவன் இன்னும் கோபமாகக் கத்தினான்.

“வூட்டுக்குள்ள ஒரே மூட்ட பூச்சி.. அத்த ஒழிச்சி கட்டணும்னு சாமான் செட்டைல்லாம் எட்த்து வெள்ள போட்டேன்.. கெரகம் புட்ச மய இன்னிக்கு பாத்து ஊத்து ஊத்துன்னு ஊத்துச்சு.. நா இன்னா வோணும்னா பண்ணே..”

அவள் எட்டு ஊருக்குக் கேட்டும்படி ஒப்பாரி வைத்துக் கொண்டே வெளியில் கிடந்த பொருட்களை உள்ளே எடுத்துக் கொண்டு போனாள்.

♥♥♥♥