
ராஜலிங்கம் தன் PA, கண்ணனை மெதுவாக கூப்பிட்டு கொண்டிருந்தார். “கண்ணா, பணத்தை நான் சொன்ன இடத்திலே பத்திரமா யார் கண்லேயும் படாத மாதிரி வைச்சுட்டியா, ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்லடா, அஞ்சு கோடி” என்றார்.
அதற்கு, “சார். நான் குப்பைகள், பழைய சைக்கிள்னு வச்சு, அழகா செட்டப் பண்ணியிருக்கேன் , கவலைப்படாதீங்க” என்றவுடன் நிம்மதியடைந்தார் ராஜலிங்கம்.
மறுநாள் பணத்தை எடுத்து எலெக்ஷன் செலவுக்கு பூத் ஏஜெண்ட்டுக்கெல்லாம் குடுத்துட வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டு தூங்கப் போனார்.
காலையில் எழுந்து பின் பக்கம் போய்ப் பார்த்தால் எல்லாம் சுத்தமா இருந்தது. ஓவென்று அலறிக்கொண்டு கண்ணனைக் கூப்பிட, பிறகு விசாரித்தால் வேலையாள் கண்ணையா காலையிலேயே சுத்தமா கீளீன் செயத்தாகவும், அதை வெளியே கொட்டப்போன போது வாசலில் இருந்த ஒருத்தர் ஒரு குப்பை லாரியிலே எடுத்துக்கிட்டு போணாங்க சார் ” என்றான். மேலும் “என்னையும் குப்பையெல்லாம் ஃபோட்டா எடுத்தாங்க” என்றான் வாயெல்லாம் பல்லாக.
உடனே வீட்டிலிருந்து கிளம்பி விடுவதுதான் சரி, என்று கதவை திறந்தால், வாசலில் எலெகஷன் ஆபிசர்ஸ் மற்றும் மீடியா ஆட்கள் காமிராவுடன் தயாராக இருந்தனர்.
