
அந்த வீட்டின் பின்புறம் இருந்த கேட் வழியே தலை தெறிக்க ஓடி வரும் கதாநாயகியை , பின்னாலிருந்து தாவிப் பிடிக்கிறான் மொட்டை மண்டை வில்லன். கையில் அகப்பட்ட நெளிந்த சிகப்பு சைக்கிளை அப்படியே தூக்கி வில்லனின் மண்டையில் நாயகி அடிக்க, வீட்டின் மாடியிலிருந்து கதாநாயகன் அருகில் இருந்த தென்னை மரத்தில் தாவி, மட்டை வழியே வில்லன் மேல் குதிக்க வேண்டும். இந்த சீனில் பாதி எடுக்கும் முன்பே கதாநாயகிக்கும், வில்லனுக்கும் ஏற்பட்டகாதல் கிசுகிசுக்களால், பாதியில் நின்றது ஷூட்டிங். இதோ, மூன்று மாதம் கழித்து தொடர்கின்றது ஷூட்டிங்.
பழைய சைக்கிளை யாரோ தூக்கிச்சென்று விட, அசோசியட் டைரக்டர் புது சிவப்பு சைக்கிள் வாங்கி அழுக்கு செய்து ,வளைத்து , முறுக்கி, ஓரம் சார்த்தி விட்டு, அழுக்குத் துணி, வெள்ளை பாட்டில், பை , எல்லாம் சரி செய்து , அலுமினிய பாத்திரம் , வறண்டசெடித் தொட்டி எல்லாம் சிதற விட்டுப் பின் மாடியில் ஏறி , தென்னை மர மட்டையை உடைத்துத் தொங்க விட்டார். ஒரு புகைப்படம் எடுத்துப் பார்த்தார். அப்பாடி, continuity shot ரெடியாயிடுச்சு –நெற்றியில் வியர்வை , நெஞ்சில் நிறைவோடு மூச்சு வாங்கினார்!
. 03.05.24. .
