சுரேஷ் ராஜகோபால்/மே தின வாழ்த்து

உழைக்கின்ற
வர்க்க மெலாம்
தழைக்கட்டும்
என்றே நினைத்து

கிழக்கு திசை செங்கதிரோன்
கை அசைத்து
வாழ்த்து
சொன்னான்

உலக மெலாம்
மேமாத முதல்நாள்
தன்னை
உழைப்பாளி
தினமாய் போற்ற

கதிரவன் தான்
நீயும் தோழி
ஓயாமல்
உழைப்ப தனாலே

வாழ்த்துக்கள்
சொல்ல வில்லை
வணங்குகிறேன் உன்னை இன்று