அழகியசிங்கர்/பயமா ?

அந்த வளாகத்தைச் சுற்றித் தெருவில் இரண்டு வாகனங்கள் (ஒரு கார், ஒரு ஸ்கூட்டர்) பல நாட்கள் கிடக்கின்றன.

அது குறித்து வாட்ஸப்பில் செய்தியை வெளியிட்டார் அடுகக்த்தின் செகரட்டரி.
அவர் செய்தது நியாயம்தான்.

போட்டோக்களையும் வெளிப்படுத்தினார். ஆனால் வளாகத்தின் உள்ளே நடந்த ஊழலை ஏனோ கண்டுகொள்ளவில்லை.அவருக்கு ஊழல் என்று தோன்றவில்லையா? கீழே குடியிருக்கும் ஒருவரின் பேத்திக்குப் பிறந்த தினம். கொண்டாட நினைத்த அந்தக் குடும்பம் வீட்டில் குவியலாகக் கிடந்த தட்டு முட்டுச் சாமான்களை வளாகத்தை ஒட்டி எல்லோரும் நடமாடும் வழியில் யாரும் வரவிடாமல். குவித்து விட்டார். அதன்பின் அதைத் திரும்பவும் எடுத்து அப்புறப்படுத்த விரும்பவில்லை.

இதை ஏன் செகரட்டரி கண்டு கொள்ளவில்லை. பயமா?