
ரமாவிற்கு உற்ற துணை சிகப்பு நிறத்தில் ஒரு அழகிய பறவை. அது எங்கிருந்து வந்தது என்று அவளுக்கு தெரியாது. தினமும் அதைப் பாக்காமல் எந்த வேலையையும் துவங்க மாட்டாள். அன்று பள்ளியிலிருந்து திரும்பிய போது அவள் முகத்தில் சோகம். அந்தப் பறவையைக் கூட அவள் பார்க்கவில்லை. அதைப் புரிந்து கொண்டது போல் அப்பறவையும் அவளைச் சுற்றி சுற்றி வந்து அவள் கையை முத்தமிட்டது.
ரமாவும் தான் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த துக்கத்தை மறந்து அதை கட்டி அணைத்துக் கொண்டாள்.
அவள் மனம் லேசாகி அந்தப் பறவையின் அன்பில் கட்டுண்டது .
04/05/2024
