
பாரதி பதிநான்கு வயது நிரம்பிய இளம் பெண்.
கொடைக்கானல் ஆங்கிலப் பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தாள்.
சிறந்த மாணவி.
அவள் பள்ளி சீருடை அணியாத நேரங்களில் எல்லாம் கறுப்பு வண்ண ஆடைகள் தான் அணிவாள்.
கேட்டால்
கறுப்புத் தான் எனக்கு புடிச்ச கலரு என்று பாடி அபிநயமும் பிடித்துக் காட்டுவாள்.
அதி புத்திசாலிப் பெண்.
அன்று மாலை வகுப்புகள் முடிந்து ஹாஸ்டல்லுக்கு போக எண்ணி பாதையில் ஒரு அழகிய பறவை , முறிந்த மரத்தின் அடி தண்டின் மீது அசையாமல் அமர்ந்திருந்தது கண்டு அருகில் சென்று பார்த்த பாரதி திடுக்கிட்டுத் தான்
போனாள்.
அவள் உடை போலவே கறுத்த மேனி, மேலும் சிவப்பு நிற கழுத்து பாகம் மென்மை , அழகுக்கு அழகு சேர்த்தது.
பாரதி தடவி விட்டும் நகராமல் இருந்த பறவை காலில் அடிப் பட்டிருப்பதை கண்ட பாரதி அந்த அழகு கொஞ்சும் பறவையை கையில் எடுத்துக் கொண்டு பள்ளிக்கூட மேனேஜர் இடம் வந்து வெண்டிய மருந்து வைத்துக் கட்டி தன் ஹாஸ்டல் அறைக்கு எடுத்துச் சென்றாள்.
ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றி சிறிது தானியங்கள் போட்டு அது உண்ணும் அழகை ரசித்த பாரதியை மற்ற பெண்கள் சூழ்ந்து
கொண்டனர்
தன் அருகில் கிடத்தி அவளும் இரவில் உறங்கி
காலை விழித்து பார்கையில் அந்த கறுப்பு அழகி எங்கும் காணவில்லை.
பறவை பறந்து விட்டது.
