அழகியசிங்கர்/வேண்டாம்

அந்த அதிசயமான பறவை முன் நின்று எப்போதும் பேசும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள் வனிதா.
நடக்கப் போகிற எல்லா நிகழ்ச்சிகளையும் பறவையிடம் பேசுவாள் வனிதா.
பறவை கூறும் உத்தரவுதான் முக்கியமானது. பறவைக்கும் வனிதாவுக்கும் இருக்கும் இந்த ஒப்பந்தம் யாருக்கும் தெரியாது.
ஒருநாள் வனிதாவைப் பெண் பார்க்க ஒரு குடும்பம் வந்தது. வனிதாவைப் பார்த்துப் பேசினால் போதும் எல்லோரும் சம்மதம் கூறி விடுவார்கள். இந்தக் குடும்பமும் அப்படித்தான். சம்மதம் சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள்.
முடிவெடுக்க வேண்டியது வனிதா கையில்தான் இருக்கிறது.
வனிதா ஓடி வந்து பறவை முன் நின்றாள்.
பறவை இந்த வரன் வேண்டாமென்று சொல்லி விட்டது. ஏன் என்று கேட்டாள் வனிதா.
‘அவனுக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன்
தொடர்பு இருக்கிறது,’ என்று கூறி கீ..கீ.. என்று கத்தியபடி பறந்து விட்டது பறவை.