சசிகலா விஸ்வநாதன்/மே தினமே வருக வருக!

அழகிய சிங்கரின் என்பா சரம்
மே தினம்
🪷
மே தினமே வருக வருக!

வெண்பனி மழையிலும்; வீசு காற்றிலும்;

அங்காடிகளையும் உணவகங்களையும் தயார் நிலையில்

வைக்கும் தொழிலாளர்களைப் போற்றுவோம்
🪷
மே தினமே வருக வருக!

சாயம் பூசின முகத்தின் சோகம்;

வலிய அமர்த்தின புன்னகை;சாலையோர

பெண்ணின் நிலை மாற.
🪷
மே தினமே வருக வருக;

வானளாவும் ஓட்டல் அறைகளையும்; மதுவங்காடிகளையும்

சாலையோர கழிவறைகளையும்,
புல்வெளி விரிப்புகளையும்,

துப்புரவு செய்யும் பணியாளர்களுக்கானதே.
🪷
மே தினமே வருக வருக!

கண நேரமும் கண் அயராமல்,

கணினி முன் அமர்ந்து கருத்தாய்

பணிபுரியும் வல்லுநருக்கு வாழ்த்துகள்
🪷
மே தினமே வருக வருக!

வெள்ளி எழ துயில் எழுந்து

வெண்ணிலா தேயும் வரை பணிபுரியும்

காவலர் தோழர்களுக்கு நன்றியாக.


1-5-2024