ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 74/அழகியசிங்கர்

ஆசிரியர் பக்கம்

05.05.2024

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

மோகினி: வணக்கம்.

அழகியசிங்கர் : வணக்கம்.

ஜெகன் :  விருட்சம் 125வது இதழை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 

அழகியசிங்கர் :  இந்த மாதம் முடிவதற்குள் கொண்டு வந்து விடுவேன்.

மோகினி : வெயில் எப்படி இருக்கிறது?

அழகியசிங்கர் :  தாங்க முடியவில்லை.  எங்கும் போக முடியவில்லை. 

மோகினி :  உங்கள் இணையம் பத்திரிகை உங்கள் நேரத்தைச் சாப்பிட்டு விடுகிறது என்று நினைக்கிறேன்.

அழகியசிங்கர் :  உண்மைதான். அதில் அதிக கவனம் செலுத்துவதால் உண்மையாகச் செய்ய வேண்டியதைச் செய்ய முடியவில்லை.

மோகினி : யாராவது புத்தகம் கொண்டு வர வேண்டுமென்று விரும்பினால் ஏற்றுக் கொள்வீர்களா?  

அழகியசிங்கர் :. என்னால் முடியாது என்று சொல்லி விடுவேன். நல்ல காலம் யாரும் கேட்டு வரவில்லை. 

 ஜெகன்: சமீபத்தில் Under the tree   அமைப்பின் மூலம் உங்களை மரியாதை செய்தார்கள் போலிருக்கிறது.  

அழகியசிங்கர் :  ஆமாம்.  அது ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சி.  என்னைக் கௌரவப்படுத்தினார்கள்.   ஆனால் எதிர்பாராதவிதமாய்ப் பேசும்படி ஆகிவிட்டது.  நான் பேசினேன். ஆனால் யோசிக்காமல் பேசினேன். அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை.  

மோகினி : சில சமயம் அப்படி ஆகிவிடும்.

அழகியசிங்கர் : பேசும்போது Conscious     ஆகப் பேச வேண்டும்.  என்ன பேசுகிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். நான் தவறு செய்துவிட்டதாகத் தோன்றுகிறது.

மோகினி :  நீங்கள் பேச்சாளர் இல்லை.  யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள். மேலும் மற்றவர்கள் பேச்சைக் கேட்கும்போது உங்கள் பேச்சை மறந்து விடுவார்கள்.

அழகியசிங்கர் : அந்த அமைப்பு என்னைப் புகழ்ந்த போது என்னாலேயே நம்ப முடியாமலிருந்தது.

மோகினி : அடுத்தமுறை  Conscious    பேசுங்கள். 

அழகியசிங்கர் : நிச்சயமாக முயற்சி செய்கிறேன்.

ஜெகன்: இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?

அழகியசிங்கர்.  முடித்துக் கொள்ளலாம். 

                             (பதிவான நேரம் : இரவு 9.41)