
நேற்று என் பதிவுக்கு எல்லோரும் பல அற்புதமான வரிகளை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் என் நன்றி. இதோ இன்னொரு வரியை இங்கே கொடுக்கிறேன். தொடர்ந்து நீங்களும் பங்கு கொள்ள வேண்டும்.
ஒரே ஒரு வரியைத்தான் எழுத வேண்டும். அது எப்போதும் மனதில் நிற்க வேண்டும். அந்த வரி எதிலிருந்தும் உருவாகலாம். நீங்களும் இதில் செயல்படலாம். பெரும்பாலும் தமிழில்தான் எடுக்க வேண்டும். எங்கிருந்து எடுத்தோமென்று குறிப்பு தேவையில்லை.
இதோ நான் கூறும் ஒரே ஒரு வரி.
அசோகமித்திரனின் ரிக்க்ஷா என்ற கதை இரண்டே கால் பக்கங்களில் அடங்கி விடும். அதில் ஒரே ஒரு வரி என் மனதை மிகவும் கவர்ந்தது. அந்த வரியை இங்கே தர உள்ளேன்.
“உலகம் க்ஷண காலம் அசைவற்று இருந்தது.”
