பி. ஆர்.கிரிஜா/வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது

அழகிய சிங்கரின் என்பா

வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
நீர் நிலைகளும்
வற்றிப் போயின
தூர் வாராத குடிநீர் ஏரிகள்
என்று மாறும் இந்நிலை !

வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
ஆனாலும் வாசலில் காய் வண்டி
இசை பொருத்திய குப்பை வாகனம்
வாசலில் கோலமிடும் மங்கையர் !

வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
எதைப் பற்றியும் கவலையின்றி இளவட்டங்கள்
பூங்கா பெஞ்சில் காதல் ஜோடிகள்
மூதாட்டியின் தளர்ந்த நடை !

வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
நியாய விலைக் கடைகளில் கூட்டம்
கோவிலில் தொடரும் நித்திய பூசை
எதையும் தாங்கும் மக்கள் !


07/05/2024