அழகியசிங்கர்/வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது

1.

வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
எனக்கு தினமும் வெறுப்பாக இருக்கிறது
நான் வெளியே போவது கிடையாது
தினமும் தூங்கிக் கழிக்கிறேன்

2.

வெயில் அதிகரித்துக்
கொண்டே போகிறது
தாகமும் அதிகரித்துக்
கொண்டு போகிறது
வெயிலில் தலைச்சுற்றலும்
அதிகரித்துக் கொண்டிருக்கிறது
இரவு தூங்க முடியவில்லை

3

வெயில் அதிகரித்துக்
கொண்டு போகிறது
தூசிகள் சேர்ந்து
எங்கும படையெடுக்கின்றன
புத்தகங்கள் எங்கும்
வாரிக் கிடக்கின்றன
வெயிலின் தாக்கம் புத்தகத்தில்