
இன்று மாலைக்குள் ஒரு கதை எழுதி போட்டிக்கு அனுப்ப வேண்டும். ஏதாவது ஒரு சின்ன கரு தேடி காலை நடைப்பயிற்சியில் இருந்தேன்.
கோலம் போடும் பெண்கள், குழாயடிச் சண்டை, மீன் வியாபாரியிடம் பேரம், சுவரொட்டி மேயும் பசு எல்லாம்வ்பார்த்தும் ஒன்றும் கிடைக்க வில்லை.
தெருக்கோடியில் வீட்டினுள் இருந்து ஒரு குரல்.
“தோ பாரு. ரெண்டு பிஸ்கட்டையும் இங்கியே தின்னுட்டுப் போ”
“போம்மா, எனக்கு ஒண்ணு, இதுக்கு ஒண்ணு” என இடுப்பில் இருந்த நாய்க்குட்டியைக் காட்டினாள் சிறுமி.
“அதுக்குப் போடவாடி வாங்கிட்டு வந்தேன்”
“ஆமாமா, நான் ஒனக்குப் பொண்ணு. இது எனக்குப் பொண்ணு” என்ற சிறுமியின் பேச்சில் விடை கிடைத்தது
