மதுவந்தி/அம்மா சூழ் உலகு

அலை பாயும் மனசை
அமைதிப்படுத்த
ஆஸ்பத்திரி வராண்டாவில்
உலாத்தியபடியிருந்த என்னை
நிறுத்தி இனிய சேதி
சொன்னார் செவிலியர்.
ராஜாவாயிருந்தால் கழுத்துமாலை
கழற்றிக் கொடுத்திருக்கலாம்.
தயாராய் வைத்திருந்த
சாக்லேட் கொடுத்தேன்.

மருமகனிடம் மனமகிழச் சொன்னேன்,
எனக்கு முன்னால் அம்மா
என் இணையாக அம்மா
எனக்குப் பின்னால் அம்மா
அந்த அம்மாவுக்கு
ஒரு அம்மா இப்போ.

இது அம்மா சூழ் உலகு.
ஆள்பவளும் அம்மா!!!
அருள்பவளும் அம்மா!!.

        .( உலக அன்னையர் தினம் 12.05.24.)

2 Comments on “மதுவந்தி/அம்மா சூழ் உலகு”

Comments are closed.