மீனாக்ஷி பால கணேஷ்/என் அம்மாவின் நினைவாக….

நான் இன்று மட்டுமே அம்மாவை
நினைவு கூரவில்லை.

நான் வாழும் ஒவ்வொரு நொடிக்கும்
அவளே சாட்சியாக நிற்கிறாள்.

அம்மா!
எங்கேனும் வலித்தால் அம்மா!
எதனையாவது ரசித்தால் அம்மா!
விளக்கேற்றினால் அம்மா!
அடுப்படியில் சமையல் குறிப்பை
நினைவுகூர்ந்தால் அம்மா!

எங்கெங்கும் என்றென்றும்
என் வாழ்வில் அம்மாவின்
ஆதிக்கமே!

மறந்தால்தானே
நினைப்பதற்கு?
என் தாயின் ஐம்பது சதம் நான்!
அவளே தன் ‘உயிர் அணு x’ஐக் கொடுத்து
என்னையும் தாயாக்கினாள்!!!
சக்தியாக்கினாள்!


( உலக அன்னையர் தினம் 12.05.24).