
பொறுமையில் பெரியவள் அவள்
புனிதத்தில் உயர்நதவள் அவள்
அறுபதைக் கடந்திட்ட போதும்
அதிசய இளையவள் அவள்
சக்தியின் வடிவம் அவள்
சரித்திர நாயகி அவள்
பக்தியில் சிறந்தவள் அவள்
பரமனின் திருநிழல் அவள்
அகிலத்தின் அன்னை அவள்
அன்பின் உருவம் அவள்
தகித்திடும் தீயினைப் போலே
தீமைகள் சாய்ப்பவள் அவள்
வருபவர்க் கெல்லாம் உணவு
வழங்கிடும் வள்ளல் அவள்
உறுமொரு ஞானம் தன்னை
உலகிற்குத் தருபவள் அவள்
சேய்கள் வேற்றுமை யின்றி
சேர்ந்திடச் செய்பவள் அவள்
தாயவள் நம்மை என்றும்
தாங்கிடும் தெய்வம் அவள்
