கேள்விக்காரன்/அம்மா என்பதுஒரு நாள் சொல் அல்ல

அதொரு
வாழ்நாள் சுரம்..

நிச்சயம்
அபஸ்வரமும்
அவ்வப்போது
எழும்.

வாழ்க்கை
மேடையே
சுர பேத
பாடலின்
கலவை தான்

அம்மா
ஆதி சுரம்..
தாளத்திலும்
தாளா அன்பு
மூதாதி தாளம்.

அம்மாவோடு
எப்போதும்
இருந்தும்
இல்லாமலும்
.
அம்மா
ஒரு அழிவிலி
கோளம்

அம்மா
பெரும் பால்வீதி
ஒளிக் கோளம்

பார்த்தும்
பார்க்க இயலாமலும்
உணர்ந்தும்.
உணர இயலாமலும்

ஆனால்
என்னில்
எப்போதும்
ஒரு வெள்ளை
அணுவாய்
கடைசி
வெள்ளை
அணுவாகவேனும்.
என்னுடன்
எந்நாளும்
எந்நேரமும்.
……………..

எப்போதும்..
ஒரு காலம் போன்ற
அழிவிலி
புதிர்க் குறியாய்!

12/05/24

2 Comments on “கேள்விக்காரன்/அம்மா என்பதுஒரு நாள் சொல் அல்ல”

Comments are closed.