
இணையக் கால கவியரங்கத்தில் படித்த கவிதைகள்
- கனவுகள் நனவுகள்
அவர்கள் வண்ணாத்திப் பூச்சியை கனவில் காண்கிறார்கள்.
நான் அது சிறகடிப்பதை மட்டும்.
தேன் தொட்டு உண்ணும் போது அவர்கள்
தேனீக்களை நினைக்க வில்லை.
அதன் பிரம்ம ரீ ங்காரம் எனக்கு கேட்கிறது
கற்பூர தீபத்தில் அவர்கள் கடவுளை க்
காண்பதாக பரவசப்படுகிறார்கள்
நான் அவர் கண்களைப் பார்த்தே
அவனை தரிசிக்கிறேன்
கனவு காண்பவர் யார் நனவில் இருப்பவர் யார்
நீங்கள் சொல்லுங்கள்
- வந்த கடவுள்
கடவுள் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
முகமன் கூறும் வழக்கமில்லை என்று சொன்னேன் .
உன் அகம் தடுமாறுகிறது.
அது உன்னைத் தடுக்கிறது
செய்தியைச் சொல்லுங்கள் என்றேன்.
உன் உள் குழப்பத்தைத் தீர்க்க வந்தேன்
அயர்ந்து போனேன்
மனது வெளிப்படையாய் தெரிய வேண்டும் என்றால்
அறிவு என்ற ஒன்றை உனக்கு ஏன் கொடுத்தேன் என்றார்
அவர்களுக்கும் தானே கொடுத்திருக்கிறீர்கள் என்றேன் எள்ளலாக
உன்னைப் போன்றவர்கள் அவர்கள் .
சிந்தித்துப் பாr .
ஒரு வித்தியாசமும் இல்லை .
எனக்கு அத்வைதம் புரிவதில்லை என்றேன்.
புரிய த்தொடங்கும் அப்போது என்னையும்
அவர்களையும் ஒன்றாக உணர்வாய் என்று மறைந்தார்.
- கனல்
முத்துச்
சுடரொளியாய்
அமைதியாக இருக்கிறாய்
உன்னை அக்னி குஞ்சு என்று அழைத்த
எங்கள் முண்டாசுக் கவிஞன் உன்னைத் தீண்டுவதால்
கண்ணனைத் தொட்ட இன்பம் பெற்றான்
காண்டவக் காட் டை உன் செரிமானத்திற்காக
நீ உண்ட காலை ஐந்தறிவு வரை அனைத்தும் உயிரிழந்தன
ஏழு நாக்குகளால் நீ இப்போதெல்லாம் உண்பது பட்டாசு
தொழிற்சாலையின் அப்பாவி மனிதர்களை
எப்படியாவது பிழைப்போம் என்று
கந்தகத்தில் வாடும் உயிர்களை
கரம் நீட்டி கரம் நீட்டி
ஏன் எமனுக்கு அளிக்கிறாய்?
உயிர்கள் வாழட்டும் கனலே
தனியட்டும் உன் தழலே
