ஒரு நான்

புஷ்பால ஜெயக்குமார்

நான் 

முன்னும் பின்னுமாய் 

தத்தளிக்கிறேன்

ஆட்டத்தின் நடுவே 

அல்லல் படும் 

பந்தினை  பார்க்காதவர்கள் 

ஆட்டத்தை ரசிக்கிறார்கள்

நெருப்பாய் எறிபவன் 

கவிஞன் ஆகிறான்

காத்திருப்பின் நேரம் 

கான்வாஸில் வரைகிறது

ஆயிரம் சித்திரங்களை

எனது கவனத்தில் 

அந்த முடிவற்ற சுவரை 

ஒட்டியபடி நடக்கின்றேன்

எதிரொலிக்கும் 

எனது அர்த்தங்களை 

வடிவமைத்த நான்

என்னுடைய 

அழகிய ஆசைகளை 

இயற்கையாகவே கட்டமைக்கிறேன்