பேரா.வையாபுரிப்பிள்ளை: கலகக்காரத்தமிழ்வாத்யார்

நா. விச்வநாதன்

.பொதுவாகத் தமிழ் இலக்கியத்தில் எதுமுந்தி என்ற ஆராய்ச்சி நடைபெறவேஇல்லை.அது அவ்வளவாக அவசியமும்இல்லை.

தமிழறிஞர்கள் காலத்தைத்தாண்டியவர்கள் என்றஅலட்சியம் இருந்ததுஎதிலும் நான் முந்தி என்ற நோய்மனோபாவம்..

உயர்வுநவிற்சியில் சுகம் காணல்ஒருமரபாகவே வளர்த்தெடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் வையாபுரிப்பிள்ளை என்ற வக்கீல் நுழைந்து காலவரையறை அவசியம் என்றறிவித்தார்.எனவேதான் பேராவையாபுரிப்பிள்ளை மீண்டும் மீண்டும்பேசுபொருளானார்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தேவாளொடு முன்தோன்றிய மூத்தகுடி என்று சொல்வதே பேராசிரியர்களின் முழுத்தகுதியாகிவிடுகிறது.ஆடம்பரமும்வெற்று ஆரவாரமும் உதவாது என்பார்.

தமிழ்,தொலுங்கு,மவையாளம்,ஆங்கிலம்பிரஞ்ச்,ஜெர்மன் மொழிகளில் புலமையாளர்.

தமிழ்க்களத்தில் “ஒண்டிக்குஒண்டி’என ஏராளமான சச்சரவுகளை எதிர் கொண்டார்.இப்படி மல்லுக்கு நின்றதாலேயேதமிழை அறிவியலோடு நெருக்கமாக்கினார்.

உ.வே.சா விற்குப் பிறகு சீவக சிந்தாமணியைப் பதிப்பித்தபோது எழுந்ததுவிவகாரம். தமிழ் ஆசான்களுக்கு பிள்ளையவர்களிடம் கடும் ஒவ்வாமை இருந்தது.பிள்ளை எதை எழுதினாலும் வம்புக்கிழுக்கக் காத்திருந்தனர்.

இன்றுகூட இந்த ஒவ்வாமை இருக்கவே செய்கிறது.இவரது கால ஆராய்ச்சி முடிவுகள் தவறானவை என்று கொஞ்சமாகவே தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு சேர்த்தே போதிக்கிறார்கள்.

பிள்ளையவர்களும் ஒன்றுவெகு முன்னே தள்ளுவது அல்லது வெகுபின்னே தள்ளுவது என்ற கணக்கு வைத்திருந்தார்.முன்னே தள்ளினால் ஆரவாரமும் சில ஆண்டுகள் பின்னே தள்ளினால் கதறுவதும் நடந்தது.

மாய அரசியல்.குறிப்பாக திராவிட இயக்க அரசியலில்பிள்ளை இருட்டிப்பு செய்யப்பட்டார் என்றகருத்துமுண்டு.மிகுந்த சிரமத்தோடு தமிழ் லெக்சிகனைவடிவமைத்தார்.இவரைப் பிய்த்து எறிந்தனர்.

பாவாணர் முதல் பாரதிதாசன்வரைபலரும் தமிழ்த்துரோகி என்று வசைபாடினர். இதற்கு முன் மலையாள லெக்சிகனை உருவாக்கியிருந்தார்.திருவனத்தபுரம் பக்கத்திலேயே இருந்துவிட்டதால் நிறைய மலையாளச் சார்புள்ளவராகக்கருதப்பட்டார்.

க.நா.சு விற்கும் இதே கருத்து இருந்தது.மலைநாட்டு மோகம் என்பர்.தொல்காப்பியம் மற்ற சில நூல்களைமலை நாட்டுடன் தொடர்புபடுத்தினார்.தமிழில் சமஸ்கிருதச் சொற்கள் தவிரஏனைய சொற்கள் தமிழே என்ற கருத்தைச்சாடினார்.

திருக்குறளின் காலத்தை ஆறாம் நுற்றாண்டு என்று வரையறை செய்கிறார். தொல்காப்பியம் பிள்ளையின் கணக்கில்ஐந்தாம் நூற்றாண்டு.சிலப்பதிகாரம் ஏழாம் நூற்றாண்டு. மணிமேகலை ஏழாம்நூற்றாண்டு.அடிக்குறிப்புகளைக் கொண்டும் சமஸ்கிருதச் சொற்களைக் கொண்டும் காலம் கணிக்கிறார். பாணினிக்குப்பிற்பட்டவை அதிலிருந்துதான் கடன் பெற்றன நம் இலக்கணநூல்கள் என்று முடிவு சொன்னார்.

அப்பர்காலம் ஆறாம் நூற்றாண்டு.கள் என்ற விகுதி தொல்காப்பியத்தில் அஃறிணைக்குமட்டுமே வரும்.திருக்குறளிலோ உயர்திணைக்கும்வரும் என்றார்.

தமிழ்மொழியில் கலப்பை ஊக்குவித்ததாகவும் குற்றச்சாட்டு உண்டு.”மறைந்தஒழுக்கத்து ஓரையும்/நாளும்/துறந்தஒழுக்கம் கிழவோர்க்கு இல்லை’என்ற தொல்காப்பியச் சூத்திரத்தில் ஓரை என்பது கிரேக்கச் சொல் என்பது இவரது கருத்து.

ஐரோப்பாவில் லத்தீனைகௌரவ மொழியாகக் கொள்வது போலசமஸ்கிருதத்தை அந்தஸ்தோடு வைத்திருக்கவேண்டியதைப் பேசினார். அது அந்தணர் மொழியன்று, அறிவாளிகளின்மொழி என்றார்.

இவரது பிரதான சீடரானபேரா.வ.ஐ.சுப்ரமணியம் அவர்களும் இந்தக் கருத்தைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.சமஸ்கிருதப் பற்றாளர்களையும்சாடினார்.

தமிழர்களாகப் பிறந்து தமிழை இகழ்ந்து வடமொழி மட்டுமே கற்பது சரியன்று.இவர்களால் வடமொழிக்கு பயன்ஏதுமில்லை.வடமொழிக்குக்கீழே தமிழ்இருப்பதை மாற்றவேண்டும் என்றார்.

சேந்தன் திவாகரம் காலத்தால் முந்தியது இந்த நூலை எழுதியது ஒரு சைவன் என்பதை மறுத்து ஜைனன் என்று நிறுவினார்.

சங்க இலக்கியங்களின் பெருமை உண்மையான வளம் தொகை நூல்களில்தான் கிடைக்கும் என்று பதிவிட்டார். சங்க இலக்கியங்கள் மற்றும் புறத்திரட்டுகளின் மேன்மைகள் பற்றி சரியானபார்வையை வைத்தார். ஆராய்ச்சி முடிவுகள் சார்பின்றி நேர்மையாக வரவேண்டும் என்றறிவித்தார். மறுஆராய்ச்சி முடிவுகள் வரும்வரை இம்முடிவுகளையே ஏற்கவேண்டும் என்றார். எனக்கு எங்கெங்கெல்லாம் சந்தேகம் வருகிறதோ அங்கெல்லாம் பேராசிரியர்களுக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. நாம் சந்தேகத்தை ஏற்றுக்கொண்டுவிடுவோம். அவர்கள் அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடமாட்டார்கள்.

குட்டையைக் குழப்பி நம்மையும் குழம்பச்செய்வார்கள். எனவே பேராசிரியர்களிடமிருந்து விலகி நிற்பேன் என்பார் கநாசு.என் சந்தேகங்களை மாணவர்களிடம் கேட்டுத்தெளிவேன். அவர்கள் புரியவைத்துவிடுவர்.

கநாசு போலத்தான் பிள்ளையவர்களும்.புதுமைப்பித்தன்தன் கதைகளில் வேளாளர்களின் பழக்கம், சடங்குகளை விவரித்திருப்பதைச் சொன்னால் குதூகலப்படுவாராம்.

வையாபுரிப்பிள்ளை சொன்னதுதான்கடைசி வார்த்தை. நம்பத்தக்கது.அதைமீறி வேறு எதையும் ஏற்றுக்கொள்ள இன்றுவரை அவசியம் ஏற்பட்டதில்லை.பின்னால் ஏற்பட்டால் பார்த்துக் கொள்ளலாம்என்பது கநாசு கட்சி. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின்மேல் ஆயிரம் விமரிசனங்கள் வைத்தாலும் அவர் தவிர்க்க முடியாதவரே