ஹரணி/வெயில் கடுமையாய் இருக்கிறது

1.

நாமெழுமுன் எழுகிறது நம்மை நகைக்கிறது
நம்மை வெம்மையில் குளிக்க வைக்கிறது
அகமும் புறமும் அள்ளிக் கொட்டி
வெயில் கடுமையாய் இருக்கிறது.

2

சுடரேற்றிச் சூடேற்றிச் சுடுகிறது சுருங்க
வைத்துத் துள்ளவிட்டு துடிக்க வைக்கிறது
தண்ணியில் ஊறிடும் எருமையாய் ஆக்கும்
வெயில் கடுமையாய் இருக்கிறது.

3.

மெய்யில் நெய்யாய் வழிந்திடும் வியர்வை
குளித்திடக் கொஞ்சம் வெப்ப மோட்சம்
பனிக்கட்டிச் சட்டையாய் கிடைத்தால் சொர்க்கம்
வெயில் கடுமையாய் இருக்கிறது.


4.

உலகையே வெப்பமாக்கும் உடம்பின் கடலில்
வியர்வை உப்பாகும் உணவுக்குப் பயனில்லை
கோடை பாலையில தாகம் கானலே
வெயில் கடுமையாய் இருக்கிறது.

One Comment on “ஹரணி/வெயில் கடுமையாய் இருக்கிறது”

Comments are closed.