அழகியசிங்கர்/சத்தம் போடாதே

அவர்களுக்குள் சண்டை. அவள் திடீரென்று சத்தம் போட்டாள். சத்தம் போடாதே என்று கூறினான். அவள் கேட்பதாய் இல்லை. ‘அப்படித்தான் சத்தம் போடுவேன்,’ என்றாள். காதுகொடுத்து அவனால் கேட்கற முடியவில்லை. ‘சத்தம் போடறதை நிறுத்தறயா மாட்டீயா’ என்றான் அவன். அவள்
அவனைப் பார்த்து ,
‘முடியாது. முடியாது’ என்று கத்தினாள். ‘உன்னாலே என் வாழ்க்கைப் பாழாயிடுத்து,’ என்று கத்தினாள்.
அவன் அவள் கன்னத்தில் அறைந்தான்.
அவள் திகைத்துப் போய் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.
சிறிது நேரம் மரண அமைதி அங்கு நிலவியது.

அவள் திரும்பவும் சத்தம் போட ஆரம்பித்தாள்.