செந்தில் பிரசாத் கவிதை

எல்லாம் தெரிந்தால்
கவர்ச்சி இல்லை என்பார்…
எழுதியது புரிந்தால்
கவிதை இல்லை என்பார்…
வரைந்தது விளங்கினால்
ஓவியம் இல்லை என்பார்…
எழுதியது புரிந்திருக்கும்
எவருக்கும்…
வரைந்தது விளங்கவில்லை
எனக்கும்.