விஜயலக்ஷ்மி கண்ணன்

பெண்

பன் முகம் கொண்ட இனியவள்,
என் கண் முன்னே
தனி அவள்.
இருபுறம் ஒளி தீபம் இருக்க,
இருட்டில் எதைத் தேடுகிறாள்?
பூதக் கண்ணாடியும் அடுத்து இருக்க,
எதற்கு கண்ணை விரிக்கிறாள்?
அவளுக்கும் புரியவில்லை.
எனக்கும் அவளைப்
புரியவில்லை!