அனங்கன்/குடும்பக்குத்துவிளக்கு

குடும்பக் குத்துவிளக்கு குனிந்ததலை நிமிரக்கூடாது.

குறிமட்டும் போதும் ஆணுக்கு…
குடும்பவிளங்க அவனைத்
தலையில் ஏற்றிக் கொண்டாடவேண்டும்.

ஒப்பனை அவசியம்…முகம்காட்டும் ஆடிமுன்இல்லை…அவன்முன்புன்னகை என்றும் விரிந்திரிக்கவேண்டும்…அழுவதற்கு சுதந்திரமில்லை.

அவனுக்காய்த் தீபமாய் எரிந்தால் பத்தினி….எத்தனை பத்தினி கதைகள் இருக்கின்றன….ஒரு இராமன் கதைதானே இருக்கிறது….

என்ன அவன் அழுக்காய்ச்சியா…அதுவும் போச்சா…!நவீனத்துவத்தில் உனக்கான வடிவமைப்புத்தான் எவ்வளவு
பொருள் பொதிந்தது.

கொஞ்சம் புரிந்துகொள்….உன்
விலங்குக்கான சாவி அவனிடமில்லை….குறியைக்
குறிபார்த்து அடி.


♦.

One Comment on “அனங்கன்/குடும்பக்குத்துவிளக்கு”

Comments are closed.