
விழித்துப் பார்க்கவில்லை!
விழிக்கின்றேன்; ஏனென்று புரியாமல்
ஏதென்று அறியாமல்
இருக்கும் உன் நிலையறிந்து.
தீபமென ஒளிர்ந்தேன்;
கரம் கூப்ப எவருமில்லை!
பந்தமாய் எரிந்தேன்;
பரிதவிக்க எவருமில்லை!
எவரும் அறியாமல்
இடக்காலால் இடறுகிறாய்.
உயர்த்துகிறாய்; உயர்
தெய்வமாய் ஊர் முன்.
உன் முகம் பார்
ஆடியில்!
பல் முக விகாரம் காட்டுவதால்,
“தலை குனி!”வெட்கியே.
நிமிர்ந்தே என் பார்வை,
இருக்கும் என்றும்.
புரிந்திருந்தாலும்,
புரியாதவள் போல்;
புரியாமல் திரிவதும்
அறியாமல் இருப்பதும், நீரே!
