
குட்டக் குட்டக்
குனியும் பெண்ணே
வட்டக் கண்ணாடியில்
எட்டி முகம் பார்த்து
“எப்படி யிருந்த நான்
இப்படியாகிட்டேனே!”
புலம்பலை நிறுத்து
தலையை நிமிர்த்து
தீபத்தின் ஒளி
காட்டும் வழியில்
நிமிர்ந்த நன்னடையும்
நேர்கொண்ட பார்வையுமாய்
முன்னேறிச்செல்
உலகமே
உன் காலடியில்

Wow! Arumai