எல்.ரகோத்தமன்/நட்சத்திரம்


             
தப்புத் தப்பாய்
புள்ளிகளை இணைத்த
கோடுகளில் விரிந்தன
தப்புத் தப்பாய்
கோலங்கள்!
 
இணைக்கும் வழி
சரியாகத் தெரியாமல்
வெறும் புள்ளிகளோடு
நின்றுவிட்டது கோலம் !
 
புள்ளிகளினூடே
விடி வெள்ளியாய்
ஒரு நட்சத்திரம்
ஒளிந்திருக்கிறது!
 
நட்சத்திரங்களின்
உதயத்திற்காக
காத்திருக்கிறது
மானுடக் காதல்!


02-06-2024