முருகு/கவிதைப் பொழுதுகள்…

கவிதை
எழுதாக்
காலைப்
பொழுதுகள்…

களிப்பின்றி
ரசிப்பின்றிக்
கடனேயெனக்
கழிபவை…

புலரியில்
புதுக்கவிதை!
புதிதாய் நிதம்
புனைந்து!

இன்றென்ன
கவிதையென்று…
இன்னுமவள்
நெருங்கி வர!

வாசிக்க வாசிக்க…
அவள்
வதன மொழி…
ரசித்து!

நன்றென்று
அவள் சொல்ல…
கன்று போல்
மனம் துள்ள!

புலனத்தில்
ஏற்றி…
பொறுமையுடன்
ஐந்தைந்தாய்…

புவனம்
முழுதனுப்பி…
ப்ளூ டிக்
வந்ததும்…

அருமைகளும்…
இனிமைகளும்…
அழகழகாய்
இமோஜிகளுமாய்!

கவிதையாய்
மாறும்…
கன்னற்
பொழுதுகள்!!!