காலச்சக்கரம் நரசிம்மன்/கிடைத்தது ஒரு பொக்கிஷம்

நான் நீண்ட நாளாக தேடிக்கொண்டிருந்த ஒரு பொக்கிஷப்படம் கிடைத்தது. அதை உங்களுக்கு பகிர்கிறேன்.

சென்னையில் தற்போது போயஸ் கார்டன் இருக்கும் இடத்தில் இருந்த ஆற்றல்மிக்க தென்னம்பாட்டையை பற்றி முகநூலில் எழுதி இருந்தேன்.

அப்போதைய சென்னப்பட்டணத்தின் மொத்த பரப்பளவே கூவம் நதி (மற்றும் அடையார் ஆறு இடைப்பட்ட பகுதிதான்.

ஸ்ரீரங்கம் போலவே, திருவல்லிக்கேணி, மயிலை, தென்னம்பாட்டை, ஆழ்வார்பாட்டை பகுதிகள் சிறுதீவாக விளங்கின.

சித்தன்ஹரிபேட்டை ( சிந்தாதரிப்பேட்டை), எழும்மூர், ( எழூம்பூர்) தண்டையார்பேட்டை, திருவான்மியூர் எல்லாமே இந்த தீவுக்கு வெளியே இருந்தன. ஆங்கிலேயர்களால் பின்னர் சென்னை நகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன.

மாடமாம் மயிலை திருவல்லிக்கேணியின் நான்கு பக்கங்களிலும் நீர்நிலைகள். கிழக்கே கடல், தெற்கே அடையாறு, வடக்கே கூவம் (அப்போது நீர் நீராடும் அளவுக்கு தூய்மையாக இருந்தது) மேற்கு எல்லையில் நுங்கம்பாக்கம் ஏரி. அந்த ஏரிக்கரையில்தான் ஆங்கிலேயர்கள் Gen Blackers கு மாளிகை எழுப்பினர். பின்னாளின் அதுவே காங்கிரஸ் மைதானம்.

நுங்கை ஏரி என்றுஅழைக்கப்பட்ட நுங்கம்பாக்கம் ஏரி, நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவிலின் அருகே தொடங்கி விஸ்தாரமாக, சைதாப்பேட்டை அடையாறு வரை நீண்டிருந்தது.

வள்ளுவர் கோட்டம், அபிபுல்லா சாலை, தி நகர், உஸ்மான் ரோடு, வாணிமகால், பாண்டி பஜார், மேற்கு மாம்பலம், ரங்கராஜபுரம், கண்ணம்மா பேட்டை, சி ஐ டி நகர், எல்லா பகுதிகளும், நுங்கை ஏரியை தூர்த்து எழுப்பப்பட்ட பகுதிகளே.

இந்த ஏரியில் பிளாக்கர்ஸ் போட்டிங் ரேஸ் நடத்தி தனது மாளிகையிலிருந்து குடும்பத்துடன் பார்ப்பார். இப்போதைய அடையார் போட்டிங் கிளப், பிளாக்கர்ஸ் மாளிகையில்தான் இருந்தது.

1930ல் காங்கிரஸ் கட்சி பிளாக்கர்ஸ் மாளிகையை வாங்கியவுடன்,போட் கிளப் அடையாறுக்கு மாற்றப்பட்டது.

படம்:
தெற்கே அடையாறு வரை நீண்டிருந்த நுங்கம்பாக்கம் ஏரி தொடங்கிய, நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆலயத்தின் 1880 படம். ஆலயம் சிறியதாக இருப்பதால், அந்த காலத்தில் சனன்திகள் இங்குமங்குமாக சிதறி இருந்து, பிறகு மதிர்சுவற்றுரடன் ஒரே முழுமையான ஆலயமாக எழுப்பப்பட்டிருக்கலாம்.

சென்னை உருவான உண்மையான நிகழ்வுகளை வைத்து ஒரு திரில்லர் நாவல் மிக விரைவில்.

One Comment on “காலச்சக்கரம் நரசிம்மன்/கிடைத்தது ஒரு பொக்கிஷம்”

  1. உங்கள் ஒவ்வொரு நூல் அறிமுகத்தின் போதும் இந்தியாவில் பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தை அதிகரிக்கச் செய்கிறீர்கள். உங்க புத்தகம் எல்லாம் வாங்குவதற்காகவே ஒரு தடவை இந்தியாவுக்கு வரணும். பார்க்கலாம்.

Comments are closed.