
சிறு வயதில் குரங்கு பெடல் போட்டேன்
இள வயதில் தோழியுடன் சைக்கிள் பயணம்
நடு வயதில் வாடகை சைக்கிள் சவாரி
இரண்டு சக்கர வாகனம்
உன்னை ஓரம் கட்டியது
முதுமையில் எனக்கு வேடிக்கை பொருள் ஆனாய்
உன்னில் பயணித்த நாட்களை
மறக்க முடியுமா ?
நிச்சயம் ஒரு நாள் உன் மேல் வலம் வருவேன்
இப்பூவுலகை
விட்டுச் செல்லுமுன் !
03/06/2024
