
சாந்தா எதேர்ச்சியாக சன்னல் வழியாகத் தெருவைப் பார்க்க நேர்ந்தது. அட! இப்போது போனவர் “என் அப்பா மாதிரியே இருக்கிறார்”, என்று நினைத்துக் கொண்டே தூக்கத்திலிருந்து அழும் குழந்தை சீதாவை சமாதனம் செய்ய முயன்றாள்; தன்னையும்கூட….
மனம் பின்னோக்கி ஓடியது. திருமணத்தில் “நகை நட்டு” சம்பந்தமான வந்த தகராறில். அவள் திருமணம் ஆகி ஏழு வருடங்கள் பிறந்த வீட்டு தொடர்பு அற்று விட்டது. கணவன் மூர்த்தி நல்லவன் தான். அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டாலும், அக்காள் மீனாவின் கோட்டை தாண்டி அறியாதவன். இத்தனைக்கும் தன் மூத்த அக்காள் மகளைத் தான் திருமணம் செய்திருந்தான்.
வாசலை யாரோ தட்டும் ஓசை. “யாராய் இருக்கும்?”.
அவருடைய நண்பர் “ஓட்டல் சேஷன்” தான். ” அம்மா! சாந்தா! உன் அப்பா வந்திருக்கிறார்; பார்” என்றார்.பின்னால் நின்றவரைப் பார்த்து அதிர்ந்து சிலையானேன். சற்று நேரத்திற்கு முன் அவரைத்தான் நான் என் அப்பா போல் இருக்கிறார் என்று தோன்றியது; எனக்கு. அந்த அளவிற்கு என் அப்பா முகம் கூட மறந்து விட்டிருந்தது. காலத்தின் கோலம்!
“அண்ணா! அவர் போடி வரை போயிருக்கிறார். நான் என்ன செய்வேன்? அவர் கோபிப்பார்” என்றாள், சாந்தா.
” அதெல்லாம் ஒன்றும் இல்லை.பயப்படாதே! அப்பாவை உள்ளே கூப்பிடு. சாப்பிடச் சொல். நான் போய் அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்.”என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அப்பாவை உள்ளே கூப்பிடுவதில் தயக்கம். திண்ணையிலேயே உட்கார்த்தி வைத்து, வாசல் படியிலேயே உட்கார்ந்து, கண்ணில் நீருடன் ஏழு வருடக் கதைகளை ப் பேசிக்கொண்டிருந்தாள்.
” வாங்கோ! வாங்கோ! அத்திம் பேர்! “என்ற குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்ப; புன்னகையுடன் மூர்த்தி.
” ஏன்னா! உங்களுக்கு கோபம் இல்லையே” , என்று கேட்க ; என்ன இப்படி கேட்கிறாய்? அத்திம்பேரை சாப்பிடச் சொல். எனக்கும் தட்டைப் போடு”, என்று கூற சூழ்நிலை எளிதாகியது. சாந்தாவின் கண்களில் புதிய மின்னல்.

திடீர் மன மாற்றங்கள் நமக்கு காரணம் தெரியாமல் சில சமயங்களில் நடக்கும்.
நல்ல மாற்றங்கள் வரவேற்க வேண்டும்.
மிக அருமை.