
“அரவிந்தர் மற்றும் ரமண மகரிஷி ஆகியோருடன் இருந்த பொழுது என் மனதில் ஏற்பட்ட ஆழ்ந்த சிந்தனை ஸ்வாமி ராமதாஸ் இடத்தில் ஏற்படவில்லை. அந்த சமயத்தில் ஸ்வாமி ராம்தாஸை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உடனே மற்ற இரண்டு குருக்களும் ஆன்மிகத்தில் மிக உயந்தவர்களாக இருப்பதைப் புரிந்துகொண்டேன். இருப்பினும் சுவாமி ராம்தாஸிடத்தில் இருந்தது வித்தியாசமாயிருந்தது. சுவாமி ராம்தாஸ் ஆடம்பர வாழ்க்கையை மேற்கொண்டது போலவும், மக்கள் அவருக்கு அரசனைப் போன்று பணி புரிவது போன்றும் அது ஒரு வகையான எதிர்மறைமான கருத்தை உருவாக்கியது.”
இது யோகி ராம்சுரத்குமார் அவர்களின் முதல் பார்வை குறித்த பதிவு. அவரே தனது மூன்றாவது சந்திப்பு குறித்து அவரது வார்த்தைகளில் இவ்வாறு பதிவு செய்கிறார்.
“இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் மூன்றாவது முறையாக சுவாமி ராம்தாஸ் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த இரண்டு குருமார்களும் (அரவிந்தர், ரமணர்) தங்கள் சரீரத்தை விட்டுச் சென்றுவிட்டார்கள். இந்தப் பிச்சைக்காரன் தனக்குள், “பெரிய ஞானியென்று அங்கீகரிக்கப்பட்ட சுவாமி ராம்தாஸை மீண்டும் தரிசிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணினான்.
எனவே 1952-ஆம் ஆண்டு இந்தப் பிச்சைக்காரன் திருவண்ணாமலையிலும், பாண்டிச்சேரியிலும் குருமார்கள் இல்லாததால் அங்கு செல்லவில்லை. இந்த முறை காஞ்சன்காட்டிலுள்ள ஆனந்தாஸ்ரமத்தில் சுவாமி ராம்தாஸ் முற்றிலுமாக ஒரு வித்தியாசமான மனிதராகத் தோன்றினார். முதல் பார்வையிலேயே இந்தப் பிச்சைக்காரனின் வாழ்க்கையின் அந்தரங்க விஷயங்களையும், குறிக்கோள்களையும் ஸ்வாமி ராமதாஸால் கூற முடிந்தது. அது மட்டுமில்லாமல், இந்தப் பிச்சைக்காரன் விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார். தனக்கு மிகவும் பல நெருங்கிய நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு வந்துள்ளதாக இந்தப் பிச்சைக்காரன் உணர்ந்தான். அதோடு ஆசிரம சூழ்நிலையிலிருந்து சுவாமி ராம்தாஸ் உண்மையில் ஒரு பெரிய ஞானி என்று இந்தப் பிச்சைக்காரன் உணர ஆரம்பித்தான். அதன்பிறகு முதன்முதலாக இந்தப் பிச்சைக்காரன் சுவாமி ராம்தாஸ் இந்தப் பிச்சைக்காரனின் தந்தை (குரு/கடவுள்) என்று புரிந்துகொண்டான்.”
(திரு. குலோத்துங்கன் எழுதிய கட்டுரை)
சுவாமி யோகி ராம்சுரத்குமார் அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூமன் கெய்லர் வாட்லிங்டனிடம் பகிர்ந்து கொண்டவை.
