
எனக்குத் தெரிந்த
நான்கைந்து தெருநாய்கள்
எப்போது கண்டாலும்
பேருந்துகளை அலற
விரட்டிக் களைத்து
வாயில் நீர் ஒழுக்கும்
எனக்கும் அதுபோலவே
ஒரு நாளேனும் திவங்க திவங்க
ஒரு பேருந்தையேனும்
விரட்டிக் குரைக்கணும்
என் விதியோ
நான் பேருந்துக்குள்
போக வேண்டியிருக்கிறது.

திவங்கத் திவங்க 🌷🌷🌷