
KALAKKAL TALKIES { SPL.EDITION}
SIRAGU RAVI
- ORU NODI
இயக்குனர் மணி வர்மன் ராஜேஷ் குமார் கதை போல ஒரு கதையை எடுத்துக் கொண்டு குழப்பமான திரைக்கதை அமைத்து ஒரு திரில்லரை தர முயற்சித்திருக்கிறார். எம் எஸ் பாஸ்கரை காணவில்லை. இன்னொரு பக்கம் காணாமல் போன பார்வதி எனும் இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்படுகிறாள். இரண்டு விசாரணைகளையும் மேற்கொள்ளும் காவல் அதிகாரி பரிதி இளமாறன் ( தமன் குமார் ) துப்பறிதலில் கண்ட வெளிச்சம் என்ன? சரியான பாதையில் போய் கடைசியில் எப்படி இரண்டு குற்றங்களையும் ஒன்றாக இணைப்பது எனும் குழப்பத்தில் அரை வேக்காடு சோறு போல ஆக்கி விட்டது திரைக்கதை. ஆனாலும் வித்தியாச திரைப்படம்.
பிட்டு : இளம் இயக்குனர்கள் திரில்லர் எடுக்கும் முன் வீணை எஸ் பாலச்சந்தரின் ‘அந்த நாள் ‘ பார்ப்பது உசிதம்.
- HIT LIST
புது வசந்தம் தந்த இயக்குனர் விக்கிரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடித்த முதல் படம். நல்ல காதல் கதையாக எடுத்துக் கொண்டு அறிமுகப்படுத்தி இருக்கலாம். ஆனாலும் விஜய் சோடையில்லை. பக்க பலமாக சரத்குமார் யாழ் வேந்தன் எனும் டிசிபி வேடத்தில். தாயையும் தங்கையையும் கடத்திய மூகமூடிக்காரனின் கட்டளைப்படி ரவுடி காளியையும் மெடிக்கல் கல்லூரி முதல்வர் கருணாகரனையும் விஜய் கொல்ல வேண்டும். செய்து முடித்து தன் உறவுகளை காப்பாற்றினானா விஜய்?
பிட்டு : சேஸ் நாவல் போல விறு விறு. கடைசி டிவிஸ்ட் தெறிப்பு.
- KARUDAN
சூரிக்கு இன்னொரு மைல்கல். சம்பளம் பத்து கோடியை எட்டி விட்டதாம். கூடவே உண்ணி முகுந்தன், சசிகுமார் என்று தோதான பல்லக்கு தூக்கிகள். கதை பழசு. நண்பனாய் இருந்த கர்ணா பணத்துக்காக கட்சி மாற, உற்ற நண்பன் ஆதீ அவனை எதிர்க்கும் பழைய சோறு. பச்சை மிளகாயாக அனாதை சொக்கன். வாலைக் குழைக்கும் வேட்டை நாய் ஒரு கட்டத்தில் எசமானின் நடவடிக்கை பிடிக்காமல் அவனையே போட்டுத் தள்ளும் ஃபினிஷ்.
பிட்டு : சாகாவரம் பெற்ற இம்மாதிரி கதைகள் இன்னும் இன்னும் வந்து கண் சுரப்பிகளை உறுத்தும். கல்லா கட்ட வைக்கும்.

🙏