
கோபாலனுக்குப் பெரிய அதிர்ச்சி. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அவர் முதலீடு செய்த பணம் எல்லாம் போய்விட்டது. விசாலம் சொன்னாளே அதில் போட வேண்டாமென்று. எல்லாம் போய் விட்டதே! கண் கலங்கினார் கோபாலன். அவருக்குப் பைத்தியம் பிடித்து விடும் போல் தோன்றியது.
விசாலம் அவர் மனநிலையைப் புரிந்துகொண்டாள். மேலும் மேலும் பேசினால் அவர் மனநிலை இன்னும் மோசமாகப் போய்விடும் என்று தோன்றியது.
“பரவாயில்லை விடுங்கள். என் சம்பளம்தான் இருக்கே.. ” என்றாள்.
அவர் ஒன்றும் பேசவில்லை. அவள் முன் கையைக் கூப்பி வணங்கினார்.
அவரை ரொம்ப யோசிக்க விடக் கூடாது என்று எண்ணிய விசாலம்,”திருப்பதிக்குப் போகலாமென்று” அழைத்தாள்.
கோபாலன் அவர் ஏமாந்ததை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க நினைத்தார்.
