
உன் ஆதூரத்தை
இதுவரை எவரும் தந்ததில்லை ஒருவரியில் உண்மையை
பகிர்ந்துவிடலாம் தந்தையே..
பிறர் துன்பத்தில்
என்ன மா
இன்பம் கிட்டிவிடும்
நீர் கற்றுத்தந்த
சொல் ஓவியத்தை
எங்கள் இதய அறைக்குள்
பத்திரமாய்
வைத்திருக்கிறோம்..
உன் கம்பு சுற்றலும்
பஞ்சாயத்து தலைவராய்
நீதி குறையாத சொல்லும்
யாதுமாகி நின்றாய் காளி
பாடிக்காட்டும் வெங்கலக்குரலும்
வேலப்பர் கோவில் சுனையில்
நீச்சல் கற்றுத்தந்த பாங்கும்
நீ உரைத்த நீதிநெறிக் கதைகளும்
உறவுகள் எதிர்ப்பலை
தெரிவித்த போதும்
மேடையேறிப் பேசுவதை
தடுக்காத உன் தனி வழியும்
மாகாணி, அரைக்காணி
இம்மி,மும்மி,அணு,குணம்
வாய்ப்பாடு சொல்லும் விதமும்
தூய்மையாய் ஆடை அணியும்
நேர்த்தியும்
அம்மா உடல் நலம் சரியில்லாமல்
படுத்தபோது
உன் அன்பு குறையாத பாடலும்
உன் திறன்மிக்க திறமைகளை
இன்னும், இன்னும்
சொல்லிக்கொண்டே போகலாம்
எங்கள் நினைவுகளின் கூடாரத்தில்
என்றும் நீங்காத வானம் நீ.
உன் சொல் ஒன்றே
எங்களுக்கான சிறகு.
