
ஒழிந்த நேரத்தில் அழைத்தவுடன்
ஓடிவரும் ஒய்யாரியா கவிதை?
ஒழிந்து போன நேரத்தை
ஒரே கணமாய் உருட்டித் திரட்டி
மொழிச் சிமிழுக்குள் போட்டடைத்து
மெளனத் தளிர்கள் மேலாகத் தூவி
பணியில் மூழ்கித் தவிக்கும் போதும்
பாதி இரவுத் துயிலின் போதும்
ஊட்ட வரும் ஒரு தேவதை அவள்
ஆவென்று வாய்திறந்து
காட்ட மறுத்தால் காட்டாற்று வெள்ளமாய்
நெஞ்சுக்குள் எழுந்து பொங்கிப் பெருகுவாள்
தஞ்சம் அடைந்தால் தாயாய் உருகுவாள்
கவிதை! பராசக்தி!
—
15-06-2024

நன்றி
Parasakthi! What a word you have chosen ! Super !👏👏🌺🙇♀️🙏