
1912
டைட்டானிக் கப்பல் அயர்லாந்தின் பெல்பாஸ்ட் துறைமுகத்தில் கட்டபடுகிறது. இங்கிலாந்தின் சவுத்மாப்டன் துறைமுகத்துக்கு அதை கொண்டுவரவேன்டும். அதன்பின் அது தன் கன்னிபயணத்துக்கு தயாராகும்
அப்போது கப்பல்களில் ஏராளமான எலிகள் தொல்லை இருந்தது. எலிகளை கொல்ல நிறைய பூனைகளை வளர்ப்பார்கள். டைட்டானிக்கில் இப்படி இருந்த ஒரு பூனையின் பெயர் ஜென்னி. ஜென்னியும் , டைட்டானிக்கை கட்டிய தொழிலாளிகளில் ஒருவருமான ஜோ முல்ஹோலாந்தும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.
ஜென்னி இதற்கு முன் நிறைய கப்பல் பயணங்களை மேற்கொண்ட அனுபவஸ்தர் பூனை. பெல்பாஸ்டில் அது கர்ப்பமும் ஆகிவிட்டது. கப்பலை டெலிவரி செய்ய, ஜென்னியும், ஜோவும் சவுதாம்ப்டன் வந்தார்கள். பயணத்தில் ஜென்னி குட்டிகளையும் ஈன்றது.
சவுதாம்ப்டன் வந்ததும், ஜோவிடம் “இவ்வளவு தூரம் வந்துவிட்டாய். டைட்டானிக்கின் கன்னி பயணத்தில் நீயும் நியூயார்க் போய்விட்டு வா. நல்ல சம்பளம் கொடுக்கிறோம்” என டைட்டானிக் கப்பல் கம்பனி கூறியது.
கப்பல் கட்டும் வேலையை விட்டு, விட்டு டைட்டானிக்கில் போவதா என ஜோவுக்கு குழப்பம். சம்பளம் வேறு நிறைய தருவதாக சொல்கிறார்கள். என்ன செய்வது? நாளை பதில் சொல்வதாக சொல்லிவிட்டு கப்பலில் ஏறி ஜென்னியுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.
ஆனால் ஜென்னி ஏதோ குழப்பத்தில் இருந்தது. கப்பல் மேலே ஏறி கடலையே உற்றுப்பார்த்தது. அதன்பின் தன் குட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு கப்பலை விட்டு வெளியே கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தது. ஜோவையும் பயம் நிரம்பிய விழிகளில் பார்த்தது. அதன்பின் துள்ளிகுதித்து சவுதாம்டன் துறைமுகத்தில் ஓடிவிட்டது. அதுதான் ஜென்னியை ஜோ கடைசியாக பார்த்தது
ஏதோ சரியில்லை என ஜோவுக்கு பட்டது. நாய், பூனைகளுக்கு புயல், பூகம்பங்களை அறியும் சக்தி உன்டு என்பது பரவலான நம்பிக்கை. கடலில் எதாவது பெரும்புயல் வரபோகிறதா என்ன?
மறுநாள் போய் டைட்டானிக் வேலை வேண்டாம் என சொல்லிவிட்டு பெல்பாஸ்ட் கிளம்பினார். “இத்தனை சம்பளத்தை யாராவது வேண்டாம் என்பர்களா?” என பலரும் பெலாப்ஸ்டில் அவரை திட்டிக்கொன்டிருந்த சமயம், டைட்டானிக் மூழ்கிய செய்தி வந்தது.
அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.
1958ம் ஆன்டு ஜோ முதன் முதலாக டிவியில் தோன்றி இந்த சம்பவத்தை சொன்னார். 1962ல் இறந்தும் போனார்.
டைட்டானிக் பூனை என ஜென்னி அதன்பின் பிரபலம் ஆகிவிட்டது
~
